கொவிற் தொற்று காரணமாக எதிர்பார்த்த பணிகளை மேற்கொள்ள முடியாது போனது என கூறி, கடந்து சென்ற இரண்டு வருடங்களை மேலதிகமாக அரசு பெற்றுக் கொள்வதற்கு எவ்வித கலந்துரையாடலும் நடைபெறவில்லை என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்தார்.
மக்கள் அரசுக்கு பெற்றுக்கொடுத்த காலம் இன்னும் மூன்று வருடங்கள் உள்ளது எனவும் குறிப்பிட்ட காலத்தில் சுபிட்சத்தின் நோக்கை நிறைவேற்றுவதற்கு முடிந்தளவு அர்ப்பணிப்புடன் செயற்படுவதே அரசின் இலக்கு எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அஸ்கிரிய மஹாநாயக்க அதி வணக்கத்துக்குரிய வரகாகோட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்து ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு கூறினார்.
அரசுக்கு இன்னும் மூன்று வருடங்கள் உள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எமக்கு உள்ளது .மேலதிகமாக மூன்று ஆசனங்களை வைத்துக்கொண்டு சிலர் ஆறு வருடங்கள் ஆட்சியைக் கொண்டு சென்றார்கள். அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைவரும் அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் தொடர்பாக இணைந்து செயல்பட வேண்டும்.அதுவே அடிப்படை சித்தாந்தம்.
