நான்தான் அடுத்த பாதுகாப்பு அமைச்சர் – பொன்சேகா!

” ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி விரைவில் மலரும். அந்த ஆட்சியில் நான்தான் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிப்பேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மீண்டும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நல்லாட்சியின்போது தலைமைப்பதவிகளை வகித்தவர்களின் செயற்பாடுகள் காரணமாகவே அந்த அரசு கவிழ்ந்தது. தற்போதைய அரசும் அப்படிதான். எனவே, விரைவில் எங்கள் ஆட்சி வரும். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சு பதவி எனக்கு வழங்கப்படும் என சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். எமது ஆட்சி வருவது உறுதி என்பதால், எனக்கான அமைச்சு பதவியும் உறுதியாகியுள்ளது.

நல்லாட்சியின்போது, சட்டம், ஒழுங்கு அமைச்சு பதவியை எனக்கு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த பதவி எனக்கு வழங்கப்பட்டால் முதலில் அவரைத்தான் கைது செய்வேன் என அஞ்சினார். அதனால் பதவி வழங்கவில்லை. வழங்கப்பட்டிருந்தாலும் மைத்திரி கூறியது நடந்திருக்கும்.” – என்றார் பொன்சேகா.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles