வெலிமடைப் பகுதியின் லூணுவத்தை தேசியக் கல்லூரியின் ஆசிரியரொருவர் உள்ளிட்டு மாணவர்கள் 25 பேர், குளவிக் கொட்டுக்கு இலக்காகி, ஊவா – பரணகமை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. மேற்படி கல்லூரி அருகிலுள்ள கித்துல் மரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்து, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியரை கொற்றத் தொடங்கின.
இதையடுத்து, ஏனைய மாணவர்களில் சிலர் அப் பகுதியில் குப்பை, கூளங்களை எரியூட்டி, புகையை எழுப்பினர். அத்துடன் குளவிகள் அடங்கியதும், குளவிக் கொற்றல்களுக்கிலக்கான ஆசிரியர் உள்ளிட்ட 25 மாணவர்கள், ஊவா – பரணகமை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைகள் அளிக்கப்பட்டனர். இவர்களில் 8 மாணவர்கள் மட்டும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஏனையோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எம். செல்வராஜா, பதுளை










