கொழும்பு, கல்கிஸ்ஸை கடற்பகுதியில் நீராடச்சென்ற இளைஞர்கள் இருவர் அலையில் அள்ளுண்டுச்சென்று காணாமல்போயுள்ளனர்.
பூண்டுலோயா ஹெரோ தோட்டத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர்கள் இருவரே இன்று இவ்வாறு அலையில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
கொழும்பில் தொழில்புரியும் பூண்டுலோயா பகுதியைச் சேர்ந்த சுமார் 17 இளைஞர்கள் இன்று கல்கிஸ்ஸை கடற்பகுதிக்கு நீராடச்சென்றுள்ளனர். அவ்வேளையிலேயே ராட்சத அலையில் சிக்கி இருவர் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர். ஏனையோர் உயிர்தப்பினர்.
காணாமல்போயுள்ள இருவரை தேடும் பணியில் சுழியோடிகளும், கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.










