பதவி துறக்கிறாரா கம்மன்பில? சபையில் இன்று விசேட அறிவிப்பு!

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, நாடாளுமன்றத்தில் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுளளார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கூடவுள்ளது. இதன்போதே அமைச்சுகள் தொடர்பான அறிவிப்புவேளையில் கம்மன்பில இந்த விசேட அறிவிப்பை விடுப்பாரென தெரியவருகின்றது.

டொலர் தட்டுப்பாட்டில் எரிபொருளை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை, மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிப்பதிலுள்ள சிக்கல்கள் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் தமதுரையில் அமைச்சர் கம்மன்பில சுட்டிக்காட்டவுள்ளார்.

அதேவேளை, அமைச்சு பதவியை துறப்பதற்கான அறிவிப்பையே கம்மன்பில இன்று வெளியிடுவார் எனவும் அரசியல் வட்டாரங்களில் கதை அடிபடுகின்றது.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரின் பங்கேற்புடன் நேற்று நடைபெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலும் கம்மன்பில தொடர்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles