பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 867 பேருக்கு சலுகை விலையில் 15 கிலோ கோதுமை மா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான பத்திரம் வருமாறு,

இது தொடர்பில் விளக்கமளித்த வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன,
” தோட்டத் தொழிலாளர்களுக்கு கோதுமை மாவை மானிய விலையில் வழங்கும் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, பாவனையாளர் விவகார அமைச்சு, வர்த்தகத்துறை அமைச்சு ஆகியன இணைந்து இந்தத் திட்டத்தை தயாரித்துள்ளன. தற்போது சந்தையில் கோதுமை மா கிலோ ஒன்று 120 ரூபாவிற்கு விற்கப்படுகிறது. எனினும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 80 ரூபாவிற்கு கோதுமை மாவை வழங்க இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்கு மாதாந்தம் 15 கிலோ கோதுமை மாவை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ச.தொ.ச. விற்பனை நிலையங்கள் மூலம் வீடுகளுக்கே கோதுமை மாவை விநியோகிக்கும் வகையில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.” என்று அமைச்சர் தெரிவித்தார்.










