இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் முழுமையான ஆதரவை வழங்க தயார்-இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (07) தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.

இந்நிலையில், சுமுகமான கலந்துரையாடல் பலனளித்ததாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles