குளவி கொட்டுக்கு இலக்கான 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீழ் கல்கந்த பகுதியில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை காமன் கூத்து விழா இடம்பெற்றது. இதன்போது காமன் கூத்தில் கலந்துகொண்டவர்கள் இன்று காலை சுமார் 10 மணியளவில் ஆற்றங்கரைக்கு சென்ற வேளை மரத்திலிருந்த குளவி கூடு கலைந்து தாக்க ஆரம்பித்தது

இதன்போது குளவி கொட்டுக்கு இலக்கான 11 நபர்கள் அப்புத்தளை பங்கட்டி வைத்தியசாலையிலும் தியத்தலாவ வைத்தியசாலையிலும் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles