நுவரெலியா, ஹைபோரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெரிகோல்ட் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கை நேற்று (04.11.2026) ஹைபோரஸ்ட் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மாத்தறை பகுதியையும், மற்றுமொருவர் தலாத்துஓயா பகுதியையும் சேர்ந்தவர்கள் எனவும், ஏனைய மூவரும் மெரிகோல்ட் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஐவரையும் இன்று (05.11.2026) வலப்பனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹைபோரஸ்ட் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.ஜி. மனோரஞ்சித் தெரிவித்துள்ளார்.
