கம்பளையில் ஆட்டோ சாரதிகள் பகல் கொள்ளை! கட்டணம் இரு மடங்காக அதிகரிப்பு!!

எரிபொருள் விலையேற்றத்தையடுத்து நாட்டில் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துவரும் நிலையில், ஆட்டோ கட்டணத்தை அதிகரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி முதல் கிலோ மீற்றருக்கு 80 ரூபாவும், அடுத்த கிலோமீற்றருக்கு 50 ரூபாவும் அறிவிடுமாறு ஆட்டோ ஓட்டுநர் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால் கம்பளை நகரில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் ஆட்டோ கட்டணத்தை ஆரம்ப ஆட்டோ கட்டணத்தை இரட்டிப்பாக அதிகரித்துள்ளனர்.

கம்பளை நகரிலிருந்து, கம்பளை வைத்தியசாலைக்கு செல்வதற்கு 80 ரூபா அறிவிடப்பட்டுவந்த நிலையில், தற்போது 150 ரூபா அறிவிடப்படுகின்றது. 500 மீற்றர் பயணம் செய்தால்கூட அந்த தொகையையே வழங்க வேண்டியுள்ளது. 150 ரூபா கட்டணமாக இருந்த பகுதிகளுக்கு தற்போது 300 ரூபா அறிவிடப்படுகின்றது என பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஏன் இவ்வளவு கட்டணம் அதிகரித்துள்ளது என கேட்டால், பயணிகளுடன் ஆட்டோ சாரதிகள் முரண்படும் நிலைமையும் காணப்படுகின்றது.

அதேவேளை, கம்பளை நகரில் சேவையில் ஈடுபடும் ஆட்டோக்களுக்கு இன்னும் ‘மீட்டர்’கூட பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles