சர்வக்கட்சி மாநாட்டின் பின்னணியில் சூழ்ச்சி உள்ளதென்பதை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஏற்றுக்கொண்டுள்ளார் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், ரணிலுடன் இணைவார்கள் என விவசாயத்துறை அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ இந்நாட்டு மக்கள் சரியான நேரத்தில் உரிய முடிவை எடுப்பார்கள். நாட்டை மீட்பதற்கான ஆணையை எங்களுக்கு வழங்குவார்கள். எனவே, ஆட்சி மாற்றம் என்பது பகல் கனவு கிடையாது.
நாட்டில் இன்று உணவு பாதுகாப்பு இல்லை. வாழ்வதற்காக போராட வேண்டிய நிலைமையே உள்ளது. இரு குடும்பங்கள் நாட்டைவிட்டே வெளியேறியுள்ளன.” – என்றும் சஜித் குறிப்பிட்டார்.