‘இடைக்கால அரசை அமைத்து புதிய அமைச்சரவையை நியமிக்கவும்’

” தற்போதைய அமைச்சரவையைக் கலைத்துவிட்டு, இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும்.”

இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் தற்போதுள்ள அமைச்சரவையை பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதியிடம் கேட்கின்றோம். நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் பேச்சு நடத்தி, பொது இணக்கப்பாட்டுடன் இடைக்கால அரசொன்றை அமைக்கவும். இது தேசிய அரசாக அமையாது.

நெருக்கடி நிலைமையில் இருந்து மீண்டு, நாடு சாதாரண நிலைக்கு வந்தகையோடு பொதுத்தேர்தலுக்கு செல்லலாம். அதுவரை இடைக்கால அரசு வேண்டும். ” – என்றார்.

Related Articles

Latest Articles