அவசரகால பிரகடனத்தை மீளப் பெறவும் – கூட்டமைப்பு வலியுறுத்து

அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும் என இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு அமைய அவரகால சட்டம் நேற்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், தமது கூட்டணியின் நிலைப்பாட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளார்.

அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும். அரசுக்கெதிரான எதிர்பினையும் போராட்டங்களையும் இதன் மூலம் அடக்க முடியாது. ” – என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles