ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகரான அமைச்சர் நாமல் ராஜபக்ச, தான் வகித்த அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இன்றிரவு நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது, பதவி துறப்பு கடிதத்தை அவர் கையளித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்கு செல்ல வேண்டும், அமைச்சரவை இராஜினாமா செய்ய வேண்டும் என நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துவரும் நிலையிலேயே நாமலின் பதவி துறப்பு இடம்பெற்றுள்ளது.










