தம்புள்ள மிரிஸ்கோனியாவ, சந்தியிலுள்ள வர்த்தகரொருவரின் வீட்டுக்குள் இன்று 8 ஆம் திகதி அதிகாலை உட்புகுந்த கொள்ளையர் கோஷ்டியொன்று நித்திரையிலிருந்த வீட்டாரை இரசாயனப் பொருளொன்றை முகத்தில் பிடித்து மயக்கம் அடையச் செய்து வீட்டில் உள்ள தங்க நகைகளையும் வாகனம் ஒன்றையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டுக்குப் பின்னால் நுழைந்த கொள்ளையர்கள் ஜன்னலிலுள்ள கம்பிகளை அகற்றிவிட்டு வீட்டுக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீட்டிலுள்ள சி.சி.டி.வி கேமராவில் உள்ள முக்கியப் பகுதிகளையும் அகற்றிச் சென்றுள்ளனர்.
வீட்டிலுள்ள பணத்தையும் தங்க நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக வீட்டார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தம்புள்ள இப்பன்கட்டுவ பிரதேசத்திலிருந்து அவர்கள் எடுத்துச் சென்ற வாகனம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீட்டிலிருந்த நாயும் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதாக வீட்டார் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.
