ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு, காலி முகத்திடலில் தற்போது தன்னெழுச்சி போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.
பெருந்திரளான இளைஞர்களும், மக்களும், சமூக செயற்பாட்டாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஜனாதிபதி மற்றும் அரசுக்கு எதிரான சுலோகங்களையும் அவர்கள் தாங்கி நிற்கின்றனர்.
இப்போராட்டத்தை கொழும்பு நகரிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
