தற்போதைய அரசாங்கம் இன்னும் சில நாள்களுக்கு மாத்திரமே ஆட்சியில் நீடிக்கும் எனத் தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, அரசாங்கத்தை விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றும் எனவும் தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து, பிரதமர் கலந்துரையாடியுள்ளார். இதில் வெறும் 88 பாராளுமன்ற
உறுப்பினர்களே கலந்துகொண்டுள்ளனர். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு 157 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், 70 சதவீதமானவர்கள் கூட
மஹிந்தவுக்கு ஆதரவளிக்கவில்லை.
அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள கட்சிகளுடன் கலந்துரையாடி அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் கொண்டுவர உள்ளது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில்,அனைவருடன் கலந்துரையாடிஇணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையை விட, அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களின்
ஆதரவு உள்ளது எனவும் கூறினார்.
எனவே, இன்னும் சில நாள்களுக்கே தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கப்போகிறது. அடுத்த முறை நீங்கள் என்னை சந்திக்கும்போது, நாம் ஆட்சியில் அமர்ந்திருப்போம்.
ஆட்சியைக் கவிழ்க்க வருகிறோம். ஆனால், ஆட்சியில் பங்கெடுக்கப்போவதில்லை என்கிற நிலைப்பாட்டிலேயே நாம் இருந்தோம். பல்வேறு கருத்து வேறுபாடு கொண்டவர்களுடன் எவ்வாறு ஆட்சியமைப்பது என்கிற பிரச்சினை எமக்கு இருந்தது எனவும் தெரிவித்தார்.