அரசுக்கு ஆதரவு வழங்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் கட்சியில் இருந்து விரட்டுவதற்கு மத்திய செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அரசை ஆதரித்து – இராஜாங்க அமைச்சு பதவிகளைப் பெற்றுக்கொண்ட சுரேன் ராகவன், சாந்த பண்டார ஆகிய இருவருக்கும் எதிராகவுமே இந்த முடிவு எடுக்கப்பட்டது என சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்தார்.
சுதந்திரக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தின் பின் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே தயாசிறி இந்த தகவலை வெளியிட்டார்