எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு காண விலையை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழியில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு நெருக்கடி தொடர்பில் தௌிவுபடுத்துவதற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இதனை குறிப்பிட்டார்.
உலக சந்தையில் காணப்படும் விலையுடன் ஒப்பிட்டு, எரிவாயு தொடர்பில் உரிய விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.