ஆளுங்கட்சி எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை இடம்பெறவுள்ளது.

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ இந்த தகவலை இன்று வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அமைச்சரவை பதவி விலக வேண்டும். ஜனாதிபதியின் விருப்பத்துக்கமைய இடைக்கால அரசு அமைய வேண்டும் . அதற்கு வழிவிடும் வகையிலான யோசனையொன்று ஜனாதிபதியிடம் இன்று முன்வைக்கப்பட்டது. நாளைய சந்திப்பிலும் அது பற்றி பேசப்படும்.

நாடாளுமன்றத்தில் 113 என்பதைவிடவும், மக்களின் கோரிக்கையே எமக்கு முக்கியம்.” – என்றார் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க.

Related Articles

Latest Articles