சபையில் சாணக்கியனுக்கு ரணில் பளார்…பளார்…..!

“ சாணக்கியனுக்குதான், ராஜபக்சக்களுடன் தொடர்பு உள்ளது. எனக்கு அவ்வாறு எந்த தொடர்பும் இல்லை. ” – இவ்வாறு இரா. சாணக்கியனுக்கு இன்று பதிலடி கொடுத்தார் ரணில் விக்கிரமசிங்க.

சபையில் இன்று உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க,

“ ராஜபக்சக்களுக்காக நான் செயற்படுவதாக ராசமாணிக்கம் நேற்று தகவல் வெளியிட்டிருந்தார். அது அப்பட்டமான பொய். அவருக்குதான் ராஜபக்சக்களுடன் தொடர்பு இருக்கின்றது. பட்டியிருப்பு தொகுதி அமைப்பாளராகக்கூட செயற்பட்டுள்ளார். மஹிந்த சரணாங் கச்சாமி, கோட்டா சரணாங் கச்சாமி என பல்லவி பாடுவது சாணக்கியனின் வழமையாக இருக்கலாம். என்னை பற்றி தவறான கருத்த பரப்ப வேண்டாம்.” – என்றார்.

Related Articles

Latest Articles