29 ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம் – அவசரகால சட்டத்துக்கும் கடும் எதிர்ப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 29 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் அவசரகால சட்டம் அமுலில் உள்ள நிலையிலும் போராட்டம் தொடர்கின்றது.

” அமைதியான போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு, அடக்கவே அரசு, அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதற்கு நாம் அஞ்சப்போவதில்லை. போராட்டம் தொடரும்.” என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

அத்துடன், அறவழி போராட்டமீது கைவைக்க வேண்டாம் என பல தரப்பினரும், அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles