குளவிக்கொட்டு – 9 பெண் தொழிலாளர்கள் பாதிப்பு!

பொகவந்தலாவ மோரா மேல் பிரிவு தோட்டத்தில் தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 09 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு உள்ளாகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (07) காலை 8.30 மணியளவில் இடம் பெற்றதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

காயங்களுக்கு உள்ளான ஒன்பது பெண் தொழிலாளர்களும் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

நன்றி – அததெரன

Related Articles

Latest Articles