எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் பெற்று தருமாறு கோரி தற்போது கொழும்பில் பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எரிவாயு விநியோகத்தை கோரி கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று முதல் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக நேற்று கிராண்ட்பாஸ் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேவேளை மஹரகம நாவின்ன பிரதேசத்திலும் எரிவாயு பெற்று தருமாறு இன்று காலை முதல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
மேலும், நாட்டின் பல பகுதிகளிலும் எரிவாயு பெற்று தருமாறு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.










