போருக்கு மத்தியில் உக்ரைனில் களமிறங்கிய கனடா பிரதமர்

உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ரஷியாவை பலமாக எதிர்கொண்டு வரும் உக்ரைனுக்கு அமெரிக்கா, கனடா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

குறிப்பாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கே நேரடியாக சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் கனடா பிரதமர் ஜஸ்டின் டிரிடியூயும் உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்குள்ள இர்பின் நகருக்கு அவர் சென்றுள்ளதாக அந்த நகர மேயர் ஒலக்சாண்டர் மார்குஷினும், உக்ரைன் ஊடகங்களும் தெரிவித்து உள்ளன.

கடுமையான போருக்கு மத்தியில் கனடா பிரதமர் உக்ரைனுக்கு நேரடியாக சென்றிருப்பது சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Articles

Latest Articles