பொதுத் தேர்தலுக்கான அழைப்பே நெருக்கடிக்கு நிலையான தீர்வு

நாட்டின் நெருக்கடி நிலைக்கு நிலையான தீர்வுகாண்பதற்கு பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதே தீர்வாக அமைய முடியுமென சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண்பது மற்றும் அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவருவதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடி தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்ைகயில்,

குறித்த காலத்தில் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்தினால் நிலையான பாராளுமன்றத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள் தொடர்பில் மக்கள் ஐக்கிய முன்னணி தற்போது யோசனைகளை முன்வைத்துள்ளது.

சபாநாயகரின் தலைமையில் கூடவுள்ள கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தி ஜனநாயக பாராளுமன்ற முறைமையை உருவாக்குவது நம்பிக்ைகயை கட்டியெழுப்ப உதவும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles