பிரதமரின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை – வெளியானது தகவல்

” நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களை இணைத்து தேசிய சபையொன்றை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார்.”

இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்தார்.

10 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” பிரதமரின் ஆலோசனையின் பிரகாரம் நாடாளுமன்றத்தில் 10 துறைசார் மேற்பார்வை குழுக்கள் நிறுவப்படும். அந்த குழுக்களில் அங்கம் வகிக்கலாம். அமைச்சு பதவிகளை ஏற்காத கட்சி தலைவர்களை உள்ளடக்கிய வகையில் தேசிய சபையொன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

அத்துடன், விரைவில் வரவு- செலவுத் திட்டமொன்றும் முன்வைக்கப்படும் என பிரதமர் குறிப்பிட்டார்.” – எனவும் கம்மன்பில தெரிவித்தார்.

Related Articles

Latest Articles