“தமிழக நிவாரணதில் வீட்டுக்கு ஒரு பொதி”

தமிழக அரசு வழங்கியுள்ள உணவு நிவாரணப் பொதிகளை பெருந்தோட்ட பகுதிகளில் விநியோகிக்கப்படும் போது வீட்டுக்கு ஒரு பொது என்ற அடிப்படையில் வழங்கப்படும் என நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தன்னிடம் தெரிவித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு வழங்கியுள்ள நிவாரண பொருட்கள் எந்த அடிப்படையில் வழங்கப்படும் என்பது தொடர்பாக இதுவரை தெளிவான விளக்கம் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் பலர் எம்மோடு தொடர்பு கொண்டு இது சம்பந்தமான விளக்கங்களை கோருகின்றனர்.

இவ்விடயம் சம்பந்தமாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட விடம் விளக்கம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்த போது அவர் மேற்கண்ட விளக்கங்களை தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தோட்டங்களில் வசிக்கின்ற மக்களின் சகல வீடுகளுக்கும் இந்த நிவாரணப் பொதிகள் வழங்கப்படவுள்ளன. இங்கு தோட்டங்களில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற தகவல் சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. அத்தகவல் பிழையானது என மாவட்ட செயலாளர் தெரிவித்ததுடன் தோட்டங்களில் வசிக்கின்ற சகல குடும்பங்களுக்கும் இந்த நிவாரண பொதி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன் மாவட்டத்தில் நகர கிராம புறங்களில் பொருள் விநியோகத்தின் போது சமுர்த்தி நிவாரணம் பெறுவோர் மட்டுமல்லாமல் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் அனைத்துக்கும் நிவாரணப் பொதிகள் வழங்கப்படவுள்ளன. எனவும் நுவரெலிய மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன் கலபொ ட தன்னிடம் தெரிவித்ததாக கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்

Related Articles

Latest Articles