புதன்கிழமை முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பம்-லிட்ரோ

இன்றைய தினமும் சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

மேலும் 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் நாளை (30) கொழும்பை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை பிற்பகல் 1 மணிக்கு இந்த கப்பல் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் புதன்கிழமை முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles