அமரர். ஆறுமுகன் தொண்டமான்தான் மலையக மக்களின் பாதுகாப்பு அரண். அவர்போன்ற ஒரு தலைவர் மறுபடியும் உருவாகப்போவதில்லை. எனவே, நாம் அவர் காட்டிய வழியில் பயணிப்போம்.”
இவ்வாறு இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின், 58 ஆவது ஜனன தினம் இன்றாகும்.
இதனைமுன்னிட்டு கொட்டகலை சிஎல்எவ் வளாகத்தில் மலரஞ்சலி, புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய செந்தில் தொண்டமான்,
” எமது மறைந்த தலைவரின் ஜனன தினம் இன்றாகும். அவர் வாழும்போது, பிறந்தநாளை கொண்டாட வலியுறுத்துவோம். அவர் உடன்படமாட்டார். அடுத்த வருடம் பார்ப்போம் எனக்கூறி சமாளிப்பார். அன்றைய நாளில்கூட மக்களுக்கே சேவை செய்வார்.
அப்படிபட்ட ஒரு தலைவர் இனி வரப்போவதில்லை. துணிவு, தூரநோக்கு சிந்தனை என கொள்கை அடிப்படையில் எம்மை அவர் வழிநடத்தியுள்ளார். மக்களின் பாதுகாப்பு அரணாக இருந்தார். அவர் இருக்கும்போது நாம் ஒன்றாக அவர் காட்டும் வழியில் பயணித்தோம். தற்போதும் அதே வழியில் பயணிப்போம்.” – என்று குறிப்பிட்டார்.
