” சவூதி அரேபியாவில் வழங்கப்படுவதைப் போன்ற கொடூர தண்டனைகள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.” என்று நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
” பண்டாரகம, அட்டலுகம பகுதியில் மலரும் முன் காய்ந்து சருகாகி காற்றில் கலந்த சிறுமி
ஆயிஷாவின் நிலைமைக்கு காரணமான கயவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். சவூதியில் வழங்கப்படுவதைப் போன்ற கொடூர தண்டனைகள் நம் நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆயிஷாவின் பேரிழப்பே இவ் அவலங்களுக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும். ” – என்றும் அவர் கூறினார்.










