A/L பரீட்சை பெறுபேறு எப்போதும் வெளியாகும்? திகதி அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்பொழுது வெளியிடப்படும் என்பது குறித்த தகவல்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன வெளியிட்டுள்ளார்.

அதன்படி பெறுபேறுகள் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது பிரயோக பரீட்சைகள் நடத்தப்பட்டுவருவதாகவும் இதற்காக கம்பிகள், ஆளிகள் மற்றும் மின்குமிழ்கள் போன்றவற்றை கொள்வனவு செய்ய பெருந்தொகை பணத்தை செலவிட நேரிட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நாட்களில் நடத்தப்பட்டு வரும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

பரீட்சையில் ஒருவருக்கு பதிலாக மற்றுமொருவர் பரீட்சையில் தோற்றிய சம்பவமொன்று பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles