எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டால் நாடளாவிய ரீதியில் உள்ள 7 ஆயிரம் பேக்கரிகளில் சுமார் 2000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமைமா விலை உயர்வால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிப்பும் இதற்கு காரணம் என குறித்த சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
