” சாதாரண தர பரீட்சை மத்திய நிலையங்களில் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தால், பரீட்சார்த்திகள் அருகிலுள்ள மற்றுமொரு பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு அமர்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.”
இவ்வாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.
வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக, இன்றைய தினம் படகு சேவை முன்னெடுக்கப்படுகின்றது.
அதேவேளை, க.பொ.த.சாதாரண தர பரீட்சை இன்றுடன் (01) நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
