நோயாளி மரணம் – பதுளையில் வைத்தியர்மீது தாக்குதல் – மூவர் கைது!

பதுளை, வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

பதுளை வைத்தியசாலையில் 15 ஆம் இலக்க நோயாளர் விடுதியில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவர், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நோயாளர் ஒருவரின் உறவினர்களால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

71 வயதான நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமையை அடுத்து, அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக 3 பேர் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles