நவீனுக்கு மனோ விடுத்துள்ள பகிரங்க சவால்!

“முடியுமானால் நுவரெலியா மாவட்டத்தை வென்றுகாட்டுமாறு நவீன் திஸாநாயக்கவுக்கு சவால் விடுக்கின்றேன்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, நவீன் திஸாநாயக்க விடுத்திருந்த அறிவிப்பொன்று தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த சவாலை விடுத்தார்.

” பொதுத்தேர்தலில் வெற்றிபெறுவது ஒரு புறம் இருக்கட்டும். முடிந்தால் நுவரெலியா மாவட்டத்தை வென்றுகாட்டுமாறு நவீன் திஸாநாயக்கவிடம் சொல்லுங்கள். அதன்பிறகு 40 ஆசனங்கள் பற்றி கதைக்கலாம்.”  என்றும் மனோ கூறினார்.

Related Articles

Latest Articles