முக்கிய இரு அமைச்சு பதவிகள் உருவாக்கம்

தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு உட்பட இரு புதிய அமைச்சு பதவிகளை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு, தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு ஆகியனவே இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன.

 

தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு பதவி தம்மிக்க பெரேராவிடம் கையளிக்கப்படும் என தெரியவருகின்றது.

பஸில் ராஜபக்சவின் இடத்துக்கு இவர் நியமிக்கப்படவுள்ளார்.

தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சின்கீழ்,

ஸ்ரீலங்கா டெலிகொம், தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, தேசிய முதலீட்டுச் சபை, ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், துறைமுகநகர் பொருளாதார திணைக்களம், தரக்கட்டளை நிறுவகம், மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவகம் (ICTA), தாமரை கோபுரம், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles