அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் இழுபறி நிலை நீடிக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும், 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஒப்புதல் கிடைக்கப்பெறவில்லை என அறியமுடிகின்றது.
எனினும், இவ்விடயம் தொடர்பில் மேலோட்டமாக ஆராயப்பட்டது.
நாளை இது தொடர்பான சில கருத்துப் பரிமாற்றங்கள் அரசு மட்டத்தில் இடம்பெற இருக்கின்றன என்றும், அதன் பின்னர் அடுத்த திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் பரிசீலிக்கப்படும் என்றும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது என அறியவந்தது.
