ஜனாதிபதி செயலகம் முன் பதற்றம் – பொலிஸார் குவிப்பு! பலர் கைது!!

ஜனாதிபதி செயலகத்துக்கு செல்லும் நுழைவாயில்களை மறித்து, கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்டதையடுத்து பதற்ற நிலை உருவானது. எனினும், சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோட்டாகோ கமவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 73 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

பிரதான நுழைவாயிலை மறித்து போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் அதிகாலை முதல் லோட்டஸ் மார்க்கத்தின் இரு பிரதான நுழைவாயில்களையும் மறித்து, கூடாரங்கள் அமைத்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பொலிஸார் அவ்விடத்துக்கு விரைந்து கூடாரங்களை அகற்ற முற்பட்டனர். இதனால் பதற்ற நிலை உருவானது. போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles