தமிழருக்கான விடுதலையை சர்வதேசம் பெற்று தரும் – சம்பந்தன் நம்பிக்கை

“தமிழ் மக்கள் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழும் நிலை ஏற்பட வேண்டும். அந்த நிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தாவிடினும் சர்வதேச சமூகம் ஏற்படுத்தியே தீரும். அந்த நம்பிக்கை இன்னமும் வீண்போகவில்லை.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இந்நிலையில், கூட்டமைப்பைச் சிதைக்கும் நோக்குடன் விமர்சனங்கள் முன்வைக்கப்படலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தீர்மானத்தின்படி கூட்டமைப்பின் தலைவராக நானே தொடர்ந்தும் பதவி வகிக்கின்றேன்.

கூட்டமைப்புக்குள் இருப்பவர்கள் எவரும் தலைவர் பதவியை சவாலுக்குட்படுத்தி கருத்துக்கள் எதனையும் முன்வைக்கவில்லை.

எனது உடல் நிலையில் சிறிய தாக்கம் ஏற்பட்டாலும் நான் இன்னமும் தைரியத்துடன்தான் இருக்கின்றேன்.

தமிழ் மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நான் அவதானித்துக்கொண்டுதான் இருக்கின்றேன். அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயங்கள் விடயங்கள் தொடர்பில் உள்நாட்டு, வெளிநாட்டு முக்கியஸ்தர்களுடன் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் பேச்சும் நடத்தி வருகின்றேன்” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles