பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் தனஞ்சய டி சில்வா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் சதமடித்து இலங்கை அணியை வலுவான நிலைக்கு உயர்த்தியுள்ளனர்.
ராவல்பிண்டியில் புதன்கிழமை நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 404 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
தனஞ்சய டி சில்வா ஆட்டமிழக்காமல் 167 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 117 ஓட்டங்களையும் பெற்றனர்.
இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் 249 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர். இதன் மூலம் 9 விக்கெட் இழப்புக்கு 434 ஓட்டங்களைப் பெற்று முதல் இன்னிங்ஸை நிறைவு செய்த பாகிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கையை நெருங்கியது இலங்கை.
மேலும், இத்தொடருக்கு முன்னதாக தனஞ்சய டி சில்வாவிடமிருந்து அணித்தலைவர் பொறுப்பைப் பெற்ற குசல் மெண்டிஸ், தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே அணித்தலைவராக சதமடித்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.










