மாலைதீவிலிருந்து சிங்கபூர்நோக்கி பயணத்தை ஆரம்பித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அங்கு சென்றடைந்த பின்னர், ஜனாதிபதியின் பிரதிநிதியால் பதவி விலகல் கடிதம், சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என தெரியவருகின்றது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்கூட்டியே செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் குறித்த அறிவிப்பை சபாநாயகர் வெளியிட்ட பின்னர், ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கக்கூடும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான முன்னேற்பாடாகவே கொழும்பு மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதென அந்த வரட்டாரங்கள் தெரிவித்தனர். எனினும், இது தொடர்பில் உத்தியோகப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
அதேவேளை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் நாளை விசேட கட்சி தலைவர்கள் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதம அமைச்சர், சர்வக்கட்சி அரசு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடி முடிவெடுக்கப்படவுள்ளது.










