ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அது சம்பந்தமாக பிரதம நீதியரசருடன் அவர் தற்போது ஆலோசனை நடத்திவருகின்றார்.
கடிதத்தின் சட்டப்பூர்வ தன்மை மற்றும் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாகவே இந்த ஆலோசனை பெறப்படுகின்றது.
சட்டமா அதிபருடனும் கலந்துரையாடல் இடம்பெறும்.
அதன்பின்னர் சபாநாயகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
ஜுலை 09 ஆம் திகதி முதல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று அதிகாலை நாட்டிலிருந்து வெளியேறினார்.
மாலைதீவு சென்றடைந்த அவர், அங்கிருந்து இன்று சிங்கபூர் நோக்கி பயணமானார்.










