பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது பாராளுமன்றம்!

அரசியலமைப்பு மற்றும் 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 04வது சரத்துக்கு அமைய நாடாளுமன்றம் இன்று(16) சனிக்கிழமை முற்பகல் 10.00 மணிக்குக் கூடுகின்றது.

1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 04வது சரத்துக்கு அமைய ஜனாதிபதி பதவியில் வெற்றிடம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம்
கூட்டப்பட வேண்டும்.

இதற்கமைய குறித்த சட்டத்தின் 05வது சரத்துக்கு அமைய ஜனாதிபதியின் பதவியில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடம் குறித்து செயலாளர் நாயகம் இன்று (16) நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.

இதனை முன்னிட்டு நாடாளுமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸாரும், படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles