சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்வதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நேற்று (15) பிற்பகல் நடைபெற்றது.
அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர், வருகை தந்த முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருடன் பதில் ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளார்.
ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் இருவரும் பதில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் அந்த இடத்தில் இருந்தார் என தெரியவருகின்றது.
இதன்போத ரஞ்சன் ராமநாயக்கவை விரைவில் விடுதலை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, நீதி அமைச்சருக்கு பதில் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.










