” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு மக்கள் ஆணை இல்லை. அக்கட்சி வீடுபோய் சேர வேண்டும். அதேபோல ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டும்.”
இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
” ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. அதற்கு செவிசாய்க்காமல் ஜனாதிபதி பதவியில் நீடிப்பதற்கு அவர் முற்பட்டால், மக்கள் கிளர்ந்தெழுவார்கள். இந்நாட்டில் மீண்டும் அரசியல் ஸ்தீரமற்ற தன்மை உருவாகும்.” – எனவும் வேலுகுமார் எம்.பி. சுட்டிக்காட்டினார்.










