பதுளையில் அரசியல் வாதியொருவருக்கு எதிராக, தமது முகநூலில் கருத்து பதிவிட்ட ஆசிரியரொருவர், சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண கல்விச்செயலாளரினாலேயே அவர் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இவ் ஆசிரியருக்கெதிராக , பதுளை அரசியல்வாதி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரையடுத்து, ஆசிரியருக்கு எதிராக பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருக்கின்மையும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட ஆசிரியர் தமது முகநூலில் குறிப்பிட்ட பதுளை அரசியல் வாதிக்கு எதிராக பல பதிவுகளை மேற்கொண்டுள்ளார். இப்பதிவுகளினால் தனது அரசியல் செயல்பாடுகளுக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக , குறிப்பிட்ட அரசியல்வாதி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியருக்கு சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டமை சட்டவிரோதமானதாகும். அரசியல் பின்னணியொன்றின் அடிப்படையியே, ஆசிரியரின் சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டிருக்கின்றது. இச் செயற்பாட்டிற்கு எதிராக, தொழிற் சங்க நடவடிக்கைளை, விரைவில் மேற்கொள்ளவிருப்பதாக, ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
எம். செல்வராஜா
