நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போட்ரி தோட்ட பகுதியில் மீட்கப்பட்ட மான்குட்டி, நல்லத்தண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த மான் குட்டியை மீட்ட நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மஞ்சுலா, அது தொடர்பில் நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அவரின் ஆலோசனையின் பிரகாரம், மான் குட்டி பாதுகாப்பாக, உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மான், நல்லத்தண்ணி வனப்பகுதியில் விடப்பட்டது.
செ.தி. பெருமாள்










