எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோசடி நடவடிக்கையில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவதாகவும் எரிபொருள் மோசடியில் ஈடுபடும் நபர்களின் QR அணுகலை தற்காலிகமாக முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சி தெரிவித்துள்ளது
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட படம் மற்றும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மேலும் குறிப்பிடுகிறது.
சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு, விற்பனை அல்லது எரிபொருள் விநியோகம் தொடர்பான படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை வட்ஸ்அப் மூலம் 0742 123 123 என்ற எண்ணுக்கு அனுப்புமாறு அமைச்சு கேட்டுக்கொள்கிறது.










