நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையில் நுவரெலியா உட்பட ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அது நீடிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, கண்டி, கேகாலை, காலி, அம்பாந்தோட்டை, மாற்றை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.










